அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
கேங்ஸ்டர் ஆக இருக்கும் அஜித், தனது மனைவி திரிஷா சொன்ன காரணத்திற்காக ஜெயிலுக்கு போகிறார். மகனின் பதினெட்டாவது பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று ஜெயிலரின் உதவியுடன் வெளியே வரும் அஜித், தனது மகனை யாரோ கடத்திவிட்டார்கள் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார். அதன் பின்னர் மகனை மீட்க அவர் மேற்கொள்ளும் போராட்டம்தான் கதை. படம் இந்திய அளவில் முதல் நாளில் 28 முதல் 30 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.