வெற்றிமாறனுடன் இணையும் படம்: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமீர்!

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (08:09 IST)
வெற்றிமாறனுடன் இணையும் படம்: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமீர்!
வெற்றிமாறன் மற்றும் அமீர் இணையும் புதிய படம் குறித்த தகவல் நேற்று வெளியான நிலையில் இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பை அமீர் சற்றுமுன் வெளியிட்டுள்ளார். 
 
வெற்றிமாறன் மற்றும் தங்கம் ஆகிய இருவரது கதை உருவாக்கத்தில் எனது திரைக்கதை வசனத்தில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளேன் என்று அமீர் தெரிவித்துள்ளார்
 
இந்த படம் குறித்த அனைத்து விவரங்களையும் விரைவில் பகிர்ந்து கொள்கிறேன் என்று அமீர் தெரிவித்துள்ளார்
 
எனவே வெற்றிமாறன் தங்கம் மற்றும் அமீர் ஆகிய மூவரது கதை திரைக்கதை வசனம் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படம் மிகப் பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
அதுமட்டுமின்றி இந்த படத்தில் நடிக்க முக்கிய நடிகர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்