மீண்டும் இணைந்த வெற்றிமாறன் அமீர் கூட்டணி!

புதன், 2 பிப்ரவரி 2022 (09:51 IST)
இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் இயக்குனர் அமீர் கூட்டணி வடசென்னை படத்துக்குப் பின்னர் மீண்டும் இணைவதாக அறிவித்துள்ளது.

இயக்குனர்கள் அமீர் மற்றும் வெற்றிமாறன் கூட்டணி ஏற்கனவே வட சென்னை படத்தில் இணைந்திருந்தது. அமீர் வட சென்னையில் நடித்திருந்த ராஜன் கதாபாத்திரம் படத்தின் தூணாக அமைந்தது. அதனால் அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முனைப்பில் வெற்றிமாறன் உள்ளார்.

இந்நிலையில் இன்று திடீரென்று இயக்குனர் அமீர் வெளியிட்டுள்ளார். அதில் ‘எனது அடுத்த பயணம் தொடங்குகிறது. திரைப்படமென்பது ஒருவரின் தனிப்பட்ட பார்வைதான். அது அழகாக மாறுவதென்பது, இன்னொருவருடன் கைக்கோர்க்கும் போதுதான். அது இன்று (02.02.2022) நடக்கிறது.’ எனக் கூறியுள்ளார். ஆனால் இது எந்த படத்துக்கான அறிவிப்பு என்பது குறித்து எந்த தகவலும் அவர் வெளியிடவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்