ஒரு வழியாக ஓடிடியில் வெளியாகும் எனிமி திரைப்படம்!

செவ்வாய், 25 ஜனவரி 2022 (15:09 IST)
ஆர்யா மற்றும் விஷால் நடித்திருந்த எனிமி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்றது.

அண்ணாத்த திரைப்படத்தின் மீது இருந்த மிகப்பெரிய எதிர்பார்ப்பால் எனிமிக்கு முதலில் போதுமான திரைகள் கிடைக்கவில்லை. இதனால் 200 திரைகளுக்கு மேல் கிடைப்பதே பெரும்பாடாகிவிட்டது. ஆனால் இப்போது அண்ணாத்த படத்தின் மோசமான விமர்சனங்களால் இந்த படத்தின் மீது வெளிச்சம் கிடைத்துள்ளது. ஆனாலும் இந்த படமும் மோசமாக இருந்ததால் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்கவில்லை.

இந்நிலையில் திரையங்குகளில் வெளியாகி 3 மாதங்களாகியும் திரைப்படம் இன்னமும் ஓடிடியில் வெளியாகவில்லை. இப்போது ஒரு வழியாக சோனி லிவ் நிறுவனம் இந்த படத்தை வாங்கி விரைவில் ஒளிபரப்ப உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்