த்ரிஷா எப்படியும் அமைச்சர் ஆகிவிடுவார்… மீண்டும் வம்பிழுக்கும் மன்சூர் அலிகான்!

vinoth

ஞாயிறு, 12 ஜனவரி 2025 (09:35 IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அப்போது அவர் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய மன்சூர் அலிகான் அந்த கால படங்களில் நடிகைகளை ரேப் செய்யும் காட்சிகள் வந்ததாகவும், அதேபோல இதிலும் எதாவது காட்சிகள் இருக்கும் என நினைத்ததாகவும் பேசியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து தமிழ் சினிமாவின் பெரும்பாலான கலைஞர்கள் அவருக்குக் கண்டனம் தெரிவித்தும், அவர் தன் பேச்சில் தவறு இல்லை என பிடிவாதமாக இருந்து வருகிறார். இதற்கிடையில் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு ஒரு அறிக்கை வெளியிட்டார். பின்னர் அந்த அறிக்கையிலும் தான் மன்னிப்புக் கேட்கவில்லை என கூறினார். அதன் பின்னர் இந்த சர்ச்சை நீதிமன்ற வழக்கு வரை சென்றது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் த்ரிஷா பற்றி கேள்வி எழுப்பிய போது “ திரிஷா இன்னும் கொஞ்ச நாளில் அமைச்சர் ஆகிவிடுவார். நீங்கள் வேண்டுமானால் போய் அவரிடம் காரியதரிசி ஆகிவிடுங்கள்” எனக் கேள்வி கேட்ட பத்திரிக்கையாளருக்கு பதிலளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்