சில தினங்களுக்கு முன்னர் விஷால் நடித்த மத கஜ ராஜா படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கு வந்த விஷால் கண்ணாடி அணிந்து, கை நடுநடுங்க பேசியது பார்ப்பவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அது முதலாக விஷாலுக்கு என்ன ஆச்சு? அவர் ஏன் இப்படி இருக்கிறார்? என சமூக வலைதளங்கள் முழுவதும் பேச்சாக இருந்தது.
இந்நிலையில் தற்போது மத கஜ ராஜா சம்மந்தமான ஒரு ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசியுள்ள அவர் “நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ (மார்க் ஆண்டனி படத்தில் பேசிய ஸ்டைலில் பேசி).. இப்பொது எனக்கு எந்த நடுக்கமும் இல்லை. உடல்நலம் தேறிவிட்டது” எனப் பேசியுள்ளார். மத கஜ ராஜா திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.