அக்மார்க் சுந்தர் சி படம்… பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெறும் மத கஜ ராஜா!

vinoth

ஞாயிறு, 12 ஜனவரி 2025 (10:21 IST)
நடிகர் விஷால் மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி 12 ஆண்டுகளாக ரிலிஸாகாமல் இருந்த மத கஜ ராஜா இன்று ரிலீசாகியுள்ளது. விஷால் மற்றும் சுந்தர் சி கூட்டணி முதல் முறையாக சேர்ந்த திரைப்படம் மத கஜ ராஜா. இந்தப் படத்தை தயாரித்த ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்டின் கடன்கள் காரணமாக வெளியாகாமல் இருந்தது.

எப்படியாவது இந்த படத்தை ரிலீஸ் செய்யவேண்டும் என விஷாலும் போராடிப் பார்த்து ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் அந்த படத்தை கைவிட்டு சென்றுவிட்டார். விடாமுயற்சி படம் பொங்கல் ரிலீஸில் இருந்து பின்வாங்கிய நிலையில் பல சிறுபட்ஜெட் படங்கள் ரிலீஸாகின்றன. அந்த வரிசையில் இப்போது விஷாலின் ‘மத கஜ ராஜா’ திரைப்படமும் இணைந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இந்த படத்தினைப் பிரபலங்களுக்கான ஸ்பெஷல் திரையிட்டுள்ளனர். அதில் படம் பார்த்த பலர் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் எனவும் இந்த பொங்கல் வின்னர் மதகஜராஜாவாகதான் இருக்கும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். விஷாலின் உடல்நிலை மற்றும் 12 ஆண்டுகள் கழித்து இந்த படம் ரிலீஸாவதால் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீது ஒரு மென்மையான பார்வை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்