' தமிழ் சினிமாவும் இதற்கு ஒரு முக்கிய காரணம்'- இயக்குனர் ஜி. மோகன்

Webdunia
புதன், 13 டிசம்பர் 2023 (18:11 IST)
அரக்கோணம் ரயில் நிலையத்தில் இரு மாணவர்கள் கஞ்சா போதையில்   நிற்க முடியாமல், தள்ளாடியபடி கீழே விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து  இயக்குனர் ஜி. மோகன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மது  மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாவதாக புகார்கள் எழுந்து வருகிறது.

இந்த நிலையில்,  அரக்கோணம் அருகே இரு மாணவர்கள் கஞ்சா போதையில் தண்டவாளத்தின்  நிற்க முடியாமல்  தள்ளாடிக் கொண்டு  கீழே விழுந்து கிடக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கஞ்சா மாணவர்கள் போதையில் தள்ளாடிய வீடியோ பற்றி, திரவுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜி. மோகன் குமார்  இதுகுறித்து தன் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ''நாளைய தமிழ்நாடு, தமிழ் சினிமாவும் இதற்கு ஒரு முக்கிய காரணம்'' என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்