25 மாணவர்கள் சஸ்பெண்ட் -மாநில கல்லூரி நிர்வாகம் உத்தரவு

புதன், 1 நவம்பர் 2023 (14:33 IST)
ரயில் நிலையங்களில் ரூட் தல பிரச்சனை காரணமாக தொடர் மோதல் விவகாரத்தில் 30 மாணவர்களை நிரந்தரமாக நீக்க வேண்டுமென மாநிலக் கல்லூரி முதல்வருக்கு ரயில்வே போலீஸார் கடிதம் எழுதிய  நிலையில் கல்லூரி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

ரயில்களில் பயணிக்கும்போது அசம்பாவித செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வேதுறை  அறிவித்திருந்தது.

கடந்த 2 ஆண்டுகளில் ரயில்  நிலையங்களில் மாணவர்களிடையே மோதல் காரணமாக 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 44   மாணவர்கள் கைது செய்யப்பட்டடனர்.

3 மாதத்திற்கு முன் மோதலில் ஈடுபட்ட மாநிலக் கல்லூரி மாணவர்கள் 15 பேரும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 10 பேரும் இடை நீக்கம் செய்யப்பட்டனர்.

ரயில் நிலையங்களில் ரூட் தல பிரச்சனை காரணமாக தொடர் மோதல் விவகாரத்தில் 30 மாணவர்களை நிரந்தரமாக நீக்க வேண்டுமென மாநிலக் கல்லூரி முதல்வருக்கு ரயில்வே போலீஸார் கடிதம் எழுதியிருந்தனர்.

இதையடுத்து,  மாநிலக்கல்லூரி மாணவர்கள் 25 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாக ரயில்வே போலீஸார் புகார் அளித்திருந்த நிலையில், கல்லூரி நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்