விடுதலை படத்தை வெற்றிமாறன் தொடங்கும் முன்பே வாடிவாசல் படத்தை சூர்யா மற்றும் தயாரிப்பாளர் தாணுவோடு இணைந்து அறிவித்தார். ஆனால் சிறிய பட்ஜெட்டில் தொடங்கிய விடுதலை நான்கு ஆண்டுகளுக்கு மேல் இழுத்துக் கொண்டதால் இன்னும் வாடிவாசல் தொடங்கப்படவில்லை.
தற்போது விடுதலை 2 திரைப்படம் ரிலீஸாகிவிட்டதால் வெற்றிமாறன் வாடிவாசல் படத்தில் கவனம் செலுத்தவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் வாடிவாசல் திரைப்படத்தை மூன்று பாகங்களாக உருவாக்கப்பட உள்ளதாகவும் ஏப்ரல் மாதத்தில் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படம் சம்மந்தமாக சமீபத்தில் சூர்யா, வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளர் தாணு ஆகியோர் சந்தித்துப் பேசினர். இந்நிலையில் படத்தை 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஜல்லிகட்டு சம்மந்தமான படம் என்பதால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்தால் வரவேற்பு சிறப்பாக இருக்கும் என இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.