வாடிவாசல் படத்திலும் இந்தி திணிப்பு எதிர்ப்பு அரசியல்… வெற்றிமாறன் போட்ட ஸ்கெட்ச்!

vinoth

வெள்ளி, 17 ஜனவரி 2025 (11:03 IST)
விடுதலை படத்தை வெற்றிமாறன் தொடங்கும் முன்பே ‘வாடிவாசல்’ படத்தை சூர்யா மற்றும் தயாரிப்பாளர் தாணுவோடு இணைந்து அறிவித்தார். ஆனால் சிறிய பட்ஜெட்டில் தொடங்கிய விடுதலை நான்கு ஆண்டுகளுக்கு மேல் இழுத்துக் கொண்டதால் இன்னும் ‘வாடிவாசல்’ தொடங்கப்படவில்லை.

தற்போது விடுதலை 2 திரைப்படம் ரிலீஸாகிவிட்டதால் வெற்றிமாறன் ‘வாடிவாசல்’ படத்தில் கவனம் செலுத்தவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ‘வாடிவாசல்’ திரைப்படத்தை மூன்று பாகங்களாக உருவாக்கப்பட உள்ளதாகவும் ஏப்ரல் மாதத்தில் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

‘வாடிவாசல்’ படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் சூர்யாவோடு இயக்குனர் அமீர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மத்தியில் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் வாடிவாசல் படத்தின் பின்னணியில் 1960 களில் நடந்த இந்தி திணிப்புக்கு எதிரான அரசியலும் பின்னணியில் இடம்பெற உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இந்த பின்னணியில் சுதா கொங்கராவும் ஒரு படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்