கென் கருணாஸுக்காக மலையாளப் படத்தை ரீமேக் செய்யும் வெற்றிமாறன்!

vinoth

புதன், 22 ஜனவரி 2025 (07:14 IST)
நடிகர் கருணாஸின் மகனான கென்னை தன்னுடைய அசுரன் திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகப்படுத்தி பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தார் இயக்குனர் வெற்றிமாறன். அதன் பின்னர் அவர் சில படங்களில் நடித்தாலும் மீண்டும் வெற்றிமாறனின் விடுதலை 2 திரைப்படம் அவருக்குப் பாராட்டுகளைப் பெற்றுத்தந்துள்ளது.

இந்நிலையியில் தற்போது வெற்றிமாறன் கென் –ஐக் கதாநாயகனாக்கி ஒரு படத்தைத் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள திரைப்படம் “ஆலப்புழா ஜிம்கானா”.

அந்த படத்தின் ரீமே உரிமையை தன்னுடைய கிராஸ் ரூட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்காக பெற உள்ளதாகவும் அதில் கென்னைக் கதாநாயகனாக நடிக்க வைக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்