ஓடிடி யில் ரிலீஸானது விடுதலை 2.. கடைசி நேரத்தில் நடந்த மாற்றம்!

vinoth

திங்கள், 20 ஜனவரி 2025 (08:06 IST)
2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து விடுதலை இரண்டாம் பாகம் கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகி பாராட்டுகளையும் நல்ல வசூலையும் பெற்றுள்ளது.

படம் நல்ல வசூலைப் பெற்றது. ஆனாலும் படத்தில் பிரச்சாரத் தொனி மிகவும் அதிகமாகவுள்ளதாகவும் ஒரு விமர்சனம் எழுந்தது. அதனால் பெரியளவில் வசூல் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வெற்றிமாறனின் மற்றப் படங்களை ஒப்பிட இந்த படத்தின் வசூல் குறைவுதான் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது விடுதலை 2 திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸாகியுள்ளது. இதன் முதல்பாகம் ஜி 5 தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி இருந்தது. இப்போது இரண்டு பாகங்களும் சேர்ந்து அமேசான் ப்ரைம் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்