இந்நிலையில், விடுதலை 2 படம் சமீபத்தில் வெளியான பிறகு, இயக்குனர் வெற்றிமாறன் வாடிவாசல் படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகளை தொடங்கிவிட்டார் என்று கூறப்பட்டது. தயாரிப்பாளர் தாணு அவர்களும் சில பேட்டிகளில், "வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும்" என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தாணு தனது சமூக வலைதள பக்கத்தில் சூர்யா மற்றும் வெற்றிமாறனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, வாடிவாசல் தொடங்கிவிட்டதாகவும், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார். "அகிலம் ஆராதிக்க வாடிவாசல் திறக்கிறது" என்று அவர் பதிவு செய்த ட்விட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை தொடர்ந்து, வாடிவாசல் திரைப்படம் விரைவில் உருவாகும் என்றும், அடுத்த ஆண்டுக்குள் படம் ரிலீஸ் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் அமீர் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறார்கள். தொழில்நுட்ப கலைஞர்களும் விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.