300 கோடி ரூபாய் கலெக்‌ஷன் படத்துக்கு பார்ட் 2 இல்லாமலா?... வெங்கடேஷ் கொடுத்த அப்டேட்!

vinoth
வியாழன், 13 பிப்ரவரி 2025 (08:50 IST)
தில் ராஜூ தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி கேம்சேஞ்சர் படம் ரிலீஸானது. சங்கராந்தியை முன்னிட்டு பெரிய வசூலை அள்ளலாம் என முடிவு செய்து இந்த படத்தை இறக்கினர். ஆனால் படம் பப்படம் ஆனது. மிகப்பெரிய பொருட்செலவில் உருவான இந்த படம் வசூலில் கோட்டை விட்டு தயாரிப்பாளருக்கு பெருத்த நஷ்டத்தைக் கொடுத்தது.

ஆனால் அதே நேரத்தில் தில் ராஜு தயாரிப்பில் அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ், மீனாட்சி சௌத்ரி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘சங்கராந்திக்கு வஸ்துனம்’ என்ற படம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சக்கைப் போடு போட்டுள்ளது. இந்த படத்தின் லாபத்தின் மூலம் தில் ராஜுவுக்கு கேம்சேஞ்சர் படத்தின் மூலம் ஏற்பட்ட மிகப்பெரிய நஷ்டம் சரிகட்டப்படும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின்ன் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேசிய வெங்கடேஷ் “சங்கராந்திக்கு வஸ்துணாம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. அந்த படம் 2027 ஆம் ஆண்டு சங்கராந்திக்கு ரிலீஸ் ஆகும்” என அப்டேட் கொடுத்துள்ளார். இந்த படத்தின் இயக்குனர் அனில் ரவிபுடி அடுத்து சிரஞ்சீவியை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்