ராம்சரணுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என பயமாக இருக்கிறது… சிரஞ்சீவி சர்ச்சைப் பேச்சு!

vinoth

புதன், 12 பிப்ரவரி 2025 (14:01 IST)
தெலுங்கு சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த போது அரசியலுக்கு சென்றார். ஆனால் அவரால் பெரியளவில் அரசியலில் சாதிக்கமுடியவில்லை. இந்நிலையில் திரும்பவும் சினிமாவுக்கு வந்து நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் நடிப்பவை பெரும்பாலும் ரீமேக் படங்களாகவே அமைந்துள்ளன. ஆனாலும் அவரால் அவருடைய முந்தைய நட்சத்திர அந்தஸ்தை பெற முடியவில்லை.

இந்நிலையில் இப்போது ஒரு திரைப்பட நிகழ்ச்சியில் அவர் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதில் “நான் வீட்டில் என் பேத்திகளோடு இருக்கும்போது, பெண்கள் விடுதியின் வார்டன் போலவே உணர்கிறேன். அதனால் ராம்சரணிடம் இந்த முறையாவது ஒரு ஆண்குழந்தையைப் பெற்றுக்கொடுக்கும்படி வாழ்த்துகிறேன். ஆனால் அவருக்கு அவருடைய மகள்தான் உலகம். அதனால் அவர் மீண்டும் பெண் குழந்தையைப் பெற்றெடுத்துவிடுவாரோ என்று அச்சமாக உள்ளது” எனப் பேசியுள்ளார்.

சிரஞ்சீவியின் இந்த பேச்சு பெண் குழந்தைகளுக்கு எதிரான பிற்போக்குத் தனமான பேச்சு என்று இப்போது கண்டனங்கள் எழுந்துள்ளன. ராம்சரணுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளுக்குப் பிறகு சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் ஒரு பெண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்