ஸ்லோமோஷன் காட்சிகள் மட்டும் இல்லையென்றால் ரஜினியால் தாக்குப் பிடிக்க முடியாது… ராம்கோபால் வர்மா கருத்து!

vinoth

வியாழன், 13 பிப்ரவரி 2025 (09:17 IST)
இந்திய சினிமாவில் சர்ச்சைக்குப் பெயர் போனவர் ராம் கோபால் வர்மா.  ஒரு காலத்தில் இந்திய சினிமாவில் முக்கிய இயக்குனராக வலம் வந்த ராம்கோபால் வர்மா அதன் பின்னர் திசை மாறினார். பி கிரேட் படங்களை எல்லாம் எடுக்க ஆரம்பித்தார். அதே போல தனது மனதில் பட்டதை தைரியமாக வெளியே சொல்லி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வதும் அவரது வாடிக்கை.

பாகுபாடின்றி அனைவரையும் காரசாரமாக விமர்சிப்பவர் ராம்கோபால் வர்மா. சமீபத்தில் கூட கேம்சேஞ்சர் படத்துக்காக ஷங்கரை நக்கல் செய்து பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இப்போது ரஜினிகாந்த் பற்றி ஒரு கருத்தை சொல்லி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ரஜினி பற்றி பேசியுள்ள அவர் “ரஜினிகாந்த் ஒரு சிறந்த நடிகரா என்றால்?... என்னால் சொல்ல முடியவில்லை. ஸ்லோமோஷன் காட்சிகள் மட்டும் இல்லையென்றால் அவரால் சினிமாவில் தாக்குப் பிடிக்க முடியாது. அவரது ரசிகர்கள் அவரைக் கடவுளாகவே பார்க்கிறார்கள். அவரால் சாதாரண வேடங்களில் நடிக்க முடியாது.” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்