அஜித்தின் அடுத்த பட இயக்குனர் லிஸ்ட்டில் இணைந்த மற்றொரு இயக்குனர்!

vinoth

வியாழன், 13 பிப்ரவரி 2025 (08:34 IST)
சமீபகாலமாக ஒவ்வொரு படத்துக்கும் இடையே இடைவெளி எடுத்துக்கொண்ட அஜித் கடந்த ஆண்டு ஒரே நேரத்தில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்தார்.  இதில் விடாமுயற்சி திரைப்படம் சமீபத்தில் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இதற்கிடையில் அஜித், கார் ரேஸ் போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளார். அதன் பின்னர்தான் அவரின் அடுத்த படத்துக்கான வேலைகள் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர்கள் லிஸ்ட்டில் மோகன் ராஜா, சிறுத்தை சிவா மற்றும் வெங்கட்பிரபு ஆகியோர் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் மகாராஜா படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன், அஜித்தை சந்தித்துப் பேசியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அவரும் அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர்கள் லிஸ்ட்டில் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்