ஆனால் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் அதன் பிறகு அடுத்தடுத்த நாட்களில் வசூல் குறைந்தது. இதற்குக் காரணம் வழக்கமான மாஸ் மசாலா படமாக இல்லாமல் அஜித் இந்த படத்தில் அடக்கி வாசித்ததுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. படத்தில் அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்த மாஸ் அம்சங்கள் இல்லை என்பது ஒரு குறையாக சொல்லப்பட்டு வருகிறது.
ஆனால் அடுத்து அஜித் நடிப்பில் வரும் குட் பேட் அக்லி திரைப்படம் வழக்கமான அஜித் மாஸ் மசாலா படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் பணியாற்றியுள்ள ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர் பேசும் போது “குட் பேட் அக்லி படம் பார்க்க வரும் ரசிகர்கள் எல்லாம் விக்ஸ் அல்லது ஹால்ஸ் எடுத்துக்கொண்டுதான் வரவேண்டும். ஏனென்றால் படம் முழுக்க கத்தி கத்தி தொண்டை வலியே வந்துவிடும்” எனக் கூறியுள்ளார்.