இந்நிலையில் இந்த படத்தில் காதல் ஓவியன் கண்ணன் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பாரதிராஜா இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளியான காதல் ஓவியம் திரைப்படம் வெற்றிப்பெறவில்லை. அதனால் அவர் அதன் பிறகு சினிமாவில் பெரிதாக நடிக்கவில்லை. இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து தற்போது அவர் சக்தி திருமகன் படத்தில் நடித்துள்ளார்.