தமிழில் ரீமேக் ஆகும் அனுஷ்கா சர்மா படம்

Webdunia
வெள்ளி, 30 மார்ச் 2018 (16:25 IST)
அனுஷ்கா சர்மா நடிப்பில் வெளியான ‘பரி’, தமிழில் ரீமேக் ஆகிறது. 
அனுஷ்கா சர்மா நடிப்பில் வெளியான ஹிந்திப் படம் ‘பரி’. புரோசித் ராய் இயக்கிய இந்தப் படத்தை, அனுஷ்கா சர்மாவே தயாரித்திருந்தார். சூப்பர் நேச்சுரல்  திரில்லரான இந்தப் படம், இந்த மாதம் 2ஆம் தேதி ரிலீஸானது. 10 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், இதுவரை 40 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.
இந்தப் படத்தை, விரைவில் தமிழில் ரீமேக் செய்ய இருக்கின்றனர். அதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. தமிழில் அனுஷ்கா சர்மா கேரக்டரில் நடிக்க  நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்