அஜித் நடித்த 'குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வரும் பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், இன்று இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகும் என அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
அஜித் - திரிஷா நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி. இந்த படத்தின் இரண்டு சிங்கிள் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில், அடுத்த கட்டமாக இந்த படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெறும் என்றும், வசூலில் சாதனை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.