திடீரென தள்ளிப்போன ‘இட்லி கடை’! குட் பேட் அக்லி வைப்தான் காரணமா?

Prasanth Karthick

வெள்ளி, 4 ஏப்ரல் 2025 (14:08 IST)

அஜித்தின் குட் பேட் அக்லியுடன் வெளியாகவிருந்த தனுஷின் இட்லி கடை ரிலீஸ் தள்ளிப் போனது.

 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம் குட் பேட் அக்லி. இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வைரலாகியுள்ளது. முன்னதாக அஜித் நடித்து வெளியான விடாமுயற்சி படம் அஜித்திற்கான ஆக்‌ஷன் காட்சிகள் குறைவாக இருந்ததால் ரசிகர்களை ஏமாற்றத்தில் தள்ளியது.

 

ஆனால் அதை ஈடுகட்டும் விதமாக இது முழுவதும் ஆக்‌ஷனான அஜித்தின் பேன் பாய் சம்பவமாக இருக்கும் என ஆதிக் கூறியுள்ளார். குட் பேட் அக்லி ஏப்ரல் 10ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தனுஷ் இயக்கி, நடித்திருக்கும் இட்லி கடை படமும் அதே தேதியில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

 

ஆனால் தற்போது இட்லி கடை படம் அக்டோபர் 1ம் தேதியில்தான் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ஒரே நேரத்தில் இரண்டு பெரிய படங்கள் ரிலீஸாவதால் தியேட்டர் ஒதுக்கும் சிக்கல் நீங்கியுள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இன்று குட் பேட் அக்லியின் ட்ரைலர் வெளியாக உள்ள நிலையில் முன்பதிவுகளும் தொடங்க உள்ளதால் ரசிகர்கள் அதற்கு ஆர்வமாக தயாராகி வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்