தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்தது என்பதும், சமீபத்தில் ஒரு சவரன் தங்கம் ₹68,000 என்றும் வெளியான செய்தியை பார்த்தோம். இதே ரீதியில் சென்றால், ஒரு சவரன் ₹1,00,000 என்ற நிலையை தொடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று திடீரென தங்கம் விலை ஒரு சவரனுக்கு ஆயிரம் ரூபாய்க்கும் மேல் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இந்த நிலையில், இன்று ஒரே நாளில் ஒரு கிராமுக்கு ₹160 ரூபாயும், ஒரு சவரனுக்கு ₹1,280 ரூபாயும் குறைந்துள்ள நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 160 ரூபாய் குறைந்து ரூபாய் 8,400 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 1280 சென்னையில் ரூபாய் 67,200 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 9,163 எனவும் ஒரு சவரன் ரூபாய் 73,304 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 108.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 108,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது