குணச்சித்திர நடிகர் ரவிகுமார் காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி..!

Siva

வெள்ளி, 4 ஏப்ரல் 2025 (14:30 IST)
தமிழ் திரை உலகில் குணச்சித்திர நடிகராக இருந்த ரவிக்குமார் என்பவர் இன்று காலமானதை அடுத்து திரையுலகினர் அவருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.
 
கேரளாவை சேர்ந்த ரவிக்குமார் கடந்த 70களில் சில படங்களில் ஹீரோவாக நடித்தார். உல்லாச யாத்திரை என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழிலும் சில படங்கள் ஹீரோவாக நடித்தார்.
 
அதன் பிறகு மலபார் போலீஸ். ரமணா. மாறன். விசில். சிவாஜி. வியாபாரி உள்ளிட்ட படங்களில் குணசத்திர நடிகராக நடித்துள்ளார். அது மட்டுமின்றி சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக ரவிக்குமார் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி இன்று காலமானார். இந்த தகவலை அவருடைய மகன் உறுதி செய்துள்ளார். நடிகர் ரவிக்குமார் மரணத்திற்கு திரை உலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்