பாலூட்டி கொண்டே பரிட்சை எழுதிய இளம்பெண்

வியாழன், 22 மார்ச் 2018 (23:17 IST)
பெண் கல்வி, பெண் உரிமை என்பது கேள்விக்குறியாக உள்ள நாடுகளில் ஒன்று ஆப்கானிஸ்தான். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அந்நாட்டில் பெண்களுக்கு ஒருசில உரிமைகள் வழங்கப்பட்டு வருகின்றன

இந்த நிலையில் அந்நாட்டை சேர்ந்த ஜஹான் டாப் என்ற இளம்பெண் கைக்குழந்தையுடன் தேர்வு எழுத வந்திருந்தார். அவர் தேர்வு எழுதி கொண்டிருந்தபோது திடீரென அவரது குழந்தை அழுததால் அவர் தேர்வு கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்று தனது குழந்தைக்கு பாலூட்டினார்.

ஒருபக்கம் பாலூட்டி கொண்டே இன்னொரு பக்கம் அவர் தேர்வு எழுதியதை மற்ற மற்ற மாணவ, மாணவிகள் ஆச்சரியம் அடைந்தனர். இதுகுறித்த புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருவதோடு ஜஹான் டாப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அவரை போல் அந்நாட்டின் பல பெண்கள் படித்து முன்னேற வேண்டும் என்று பலர் சமூக வலைத்தளங்கள் மூலம் கருத்து கூறி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்