மீண்டும் இணைகிறதா சந்திரமுகி கூட்டணி? மூத்த இயக்குனர் பக்கம் சாயும் ரஜினி!

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (08:41 IST)
ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் மற்றும் லால் சலாம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் மற்றும் லால் சலாம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதன் பின்னர் அவர் நடிக்கும் படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ரஜினியின் அடுத்த படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது சம்மந்தமாக ரஜினி, அவரிடம் கதை கேட்டதாகவும் ஆனால் அந்த கதையில் திருப்தி இல்லாததால் அந்த கதையில் நடிக்க மறுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது ஒப்பந்தமாகி இருக்கும் இரண்டு படங்களையும் முடித்த பின்னர் பி வாசு இயக்கத்தில் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக ஏற்கனவே பி வாசு ரஜினிக்கு ஒரு கதை சொல்லி அதற்கு சம்மதம் வாங்கி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இவர்கள் கூட்டணியில் உருவான சந்திரமுகி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்