ஒருகாலத்தில் பிரபல மலையாள கதாநாயகர்களின் படங்களுக்கு இணையாக வசூலில் கொடிகட்டிப் பறந்தது ஷகிலாவின் பி கிரேட் படங்கள். மலையாளத்தில் மட்டும் இல்லாமல் தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் அவர் படங்கள் பலத்த வரவேற்பைப் பெற்றன. ஆனால் ஒரு கட்டத்தில் அங்கிருந்து விரட்டப்பட்டதாக சொல்லப்படுவதுண்டு.
அதன் பின்னர் அவருக்கு அந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. சில தமிழ்ப் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் பிரபலங்களை நேர்காணல் செய்யும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள ஒரு நேர்காணலில் ஷாருக் கான் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்ததாகக் கூறியுள்ளார்.
அதில் “ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடிக்க என்னை அழைத்தார்கள். ஆனால் நான் ஆடிஷன் கொடுத்தால்தான் எனக்கு அந்த வேடம் கிடைக்கும் என்றார்கள்.என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஷாருக்கான் மாதிரி நானும் பிரபலமான நடிகைதான். தெரியாது என்றால் ஷகீலா மலையாளம் என்று கூகுளில் தேடிப் பார்த்துக் கொள்ளுங்கள் என சொல்லி அந்த பட வாய்ப்பை மறுத்துவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.