முதல் போஸ்டரே காப்பிதானா?.. வேலையைக் காட்டிய அட்லி.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

vinoth

வியாழன், 10 ஏப்ரல் 2025 (11:25 IST)
தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் அட்லி பாலிவுட் சென்று ஜவான் என்ற பிளாக்பஸ்டர் படத்தை ஷாருக் கானுக்குக் கொடுத்தார். இதன் மூலம் இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனர் ஆகியுள்ளார். இவர் தன்னுடைய படங்களுக்கான கதையை பிற படங்களில் இருந்து காப்பி அடிக்கிறார் என்ற குற்றச்சாட்டு இருந்தபோதும் தொடர்ந்து அவரது படங்கள் ஹிட்டாவதால் முன்னணி நடிகர்கள் அவர் படத்தில் நடிக்க விரும்புகின்றனர்.

இந்நிலையில் அட்லி, அல்லு அர்ஜுன் மற்றும் சன் பிக்சர்ஸ் கூட்டணியில் ஒரு படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்துக்கு சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். படம் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்‌ஷன் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த பட அறிவிப்பு சம்மந்தமாக வெளியிட்ட போஸ்டர் இணையத்தில் தற்போது கேலிக்குள்ளாகியுள்ளது. ஏனென்றால் ஹாலிவுட் படமான DUNE படத்தின் அட்டைக் காப்பியாக அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதால்தான். வழக்கமாக கதைகளில்தான் பிற படங்களில் இருந்து அட்லி சுடுவார். ஆனால் இந்த முறை போஸ்டரிலேயே தொடங்கிவிட்டார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்