தமிழ் சினிமா குறித்த செய்திகளை யூட்யூப் சேனல் மூலமாக பேசி வருபவர் சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி. சமீபத்தில் அவர் பேசிய வீடியோ ஒன்றில் ரஜினியை முன்னாள் சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டு பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ரஜினி ரசிகர்கள் பத்திரிக்கையாளரின் வீட்டுக்கே சென்று வாக்குவாதம் செய்துள்ளனர்.
அங்கு அவர்களுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தை, அவர் தனது கருத்தை திரும்ப பெறுவதாக வீடியோ ஒன்றை வெளியிட வேண்டும் என ரஜினி ரசிகர்கள் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த வாக்குவாதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது வீட்டிற்கே சென்று வாக்குவாதம் செய்ததை சக பத்திரிக்கையாளர்கள் சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.