Good Bad Ugly Review: அஜித் நடித்த குட் பேட் அக்லி என்ற திரைப்படம் இன்று வெளியாகி இருக்கும் நிலையில், இந்த படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவ் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.
கேங்ஸ்டர் ஆக இருக்கும் அஜித், தனது மனைவி திரிஷா சொன்ன காரணத்திற்காக ஜெயிலுக்கு போகிறார். மகனின் பதினெட்டாவது பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று ஜெயிலரின் உதவியுடன் வெளியே வரும் அஜித், தனது மகனை யாரோ கடத்திவிட்டார்கள் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார்.
அஜித்தின் மகனை போதைப்பொருள் வழக்கில் திட்டமிட்டு சிக்க வைத்துள்ளார்கள் என்று தெரிந்தவுடன், அஜித்தின் முன்னாள் பகைவர்கள் தான் தனது மகனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளார்கள் என்பதை திரிஷா கூறுகிறார்.
இதனை அடுத்து, மகனை கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் அஜித், மகனை மீட்டாரா என்பது தான் மீதி கதை.
முதல் பாதையில் அட்டகாசமாக வரும் அஜித், A.I தொழில்நுட்பத்துடன் காட்டப்படும் காட்சிகளில் பட்டையை கிளப்பி இருக்கிறார். படம் ஆரம்பத்தில் குடும்பக் கதையாக ஆரம்பித்து, அதன் பின் ஆக்சன் கதையாக மாறும்போது, அஜித் நடிப்பில் மிரள வைக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
குட் போர்ஷனில் இருந்து பேட் போர்ஷனுக்கு மாறி, அதன் பின் அக்லி போர்ஷனுக்கு திரும்பும் போது ரசிகர்களுக்கான விருந்து ஆரம்பிக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் திரைக்கதையில் மேஜிக் காட்டியுள்ளார்; அஜித்தின் பழைய படங்களில் உள்ள காட்சிகளை ரெப்ரன்ஸ் ஆக வைத்து விருந்து படைத்துள்ளார்.
அஜித் கேரக்டர் மட்டும் இன்றி, இந்த படத்தில் உள்ள அனைத்து கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதையை அமைத்துள்ளார். என்றாலும், அஜித் தான் படத்தை தாங்கிப் பிடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிவி பிரகாஷின் இசை மற்றும் பாடல்கள் பட்டையை கிளப்பியுள்ளது. கிளைமாக்ஸ் ஸ்டண்ட் காட்சியின்போது ஆலுமா டோலுமா” பாடல் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்.
மொத்தத்தில், அஜித்துக்கு இந்த படம் நிச்சயம் ஒரு வெற்றி படமாக தான் இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.