அவரோட அந்த புத்தகத்தை எடுத்துட்டு வறதுக்குள்ள..! – கி.ரா குறித்து நடிகை ப்ரியா பவானி சங்கர்!

Webdunia
செவ்வாய், 18 மே 2021 (12:38 IST)
தமிழின் மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் இயற்கை எய்திய நிலையில் அவரது புத்தகத்தை படித்த அனுபவங்களை நடிகை ப்ரியா பவானி சங்கர் பகிர்ந்துள்ளார்.

தமிழ் இலக்கிய சூழலில் பல நெடுகாலமாக பல்வேறு சிறுகதைகள், நாவல்கள் உள்ளிட்ட பல படைப்புகளை கொடுத்தவர் கி.ராஜநாராயணன். சாகித்ய அகாதமி விருது வென்ற எழுத்தாளரான கி.ரா தனது 99 வயதில் உடல்நல குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கி.ரா குறித்து பதிவிட்டுள்ள நடிகை ப்ரியா பவானி சங்கர் “கி.ராஜநாரயணன் - தமிழ் பேசினா fine கட்டனும்னு class leader-அ பெயர் எழுத சொல்ற school-ல, we are trained and tamed to think in English for 14 long years. அப்படி ஒரு வாழ்க்கைமுறையில் ஒரு private librarian பரிந்துரையில் ‘கோபல்ல கிராமம்’ மூலம் அறிமுகமானவர் தான் கி.ரா

அப்புறம் 14,15 வயதில், ‘வயது வந்தவர்களுக்கு மட்டும்’ அப்படிங்கற பேர் நம்மல impress பண்ண, ஒரு குறுகுறுப்புடன் அதை librarian கிட்ட வச்ச என்னை நினைச்சா எனக்கே சில சமயம் இப்படி இருக்கும். அதன் வழி கி்.ரா இன்னும் பரிச்சயமாகிறார். அவருடைய சிறுகதைகள் நான் வாழாத உலகத்தை மனசுல பதியவச்சுது. எழுத்தாளர்கள் என்றுமே மறைவதில்லை. இப்பவும் என்னை புன்னகைக்க வைக்கிறார். நிறைவான வாழ்க்கை” என்று தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்