இந்நிலையில் அவர் தனது அடுத்த படத்தில் கார்த்தியை இயக்கவுள்ளார். இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் கதைக்களம் 1960 களில் கடற்கரை மற்றும் கப்பல் பின்னணியில் நடப்பது போல உருவாக்கப்பட்டதால் முன்தயாரிப்பு பணிகள் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. இந்த படத்துக்கு மார்ஷல் என்று தலைப்பு வைக்கப்பட்டு சில தினங்களுக்கு முன்னர் முதல் லுக் போஸ்டர் வெளியானது.
இந்த படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா லஷ்மி நடிக்க, சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க மலையாள நடிகரான நிவின் பாலியிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் கால்ஷீட் உள்ளிட்ட சில காரணங்களால் தற்போது இந்த படத்திலிருந்து நிவின் பாலி நடிக்கவில்லை என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.