கியாரா அத்வானிக்குப் பெண் குழந்தை பிறந்தது…! ரசிகர்கள் வாழ்த்து மழை

vinoth

புதன், 16 ஜூலை 2025 (11:52 IST)
பாலிவுட்டின் இளம் கதாநாயகியான கியாரா அத்வானி கரண் ஜோஹர் இயக்கிய ‘லஸ்ட் ஸ்டோரி’ ஆந்தாலஜியில் நடித்தன் மூலம் பிரபலம் ஆனார். அதன் பின்னர் தொடர்ந்து முன்னணி நடிகர்களோடு இணைந்து பெரிய பட்ஜெட் படங்களில் நடித்துள்ளார்.

பாலிவுட் தாண்டியும் தற்போது  தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.  இதையடுத்து அவர் கடந்த 2023 ஆம் ஆண்டு சக பாலிவுட் நடிகரான சித்தார்த் மல்ஹோத்ராவைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்.

இதையடுத்து கடந்த ஆண்டு வார் 2 படத்தில் நடிக்கும் போதே அவர் கர்ப்பமானார். இதையடுத்து தற்போது கியாராவுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளதாக பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் இன்னும் கியாரா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்