தெலுங்கு திரையுலகில் அடுத்தடுத்து சோகம்.. பிரபல நடிகர் ரவி தேஜாவின் தந்தை காலாமானார்!

vinoth

புதன், 16 ஜூலை 2025 (11:59 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவி தேஜா. தெலுங்கு சினிமாவை வாரிசு நடிகர்களே அதிகளவில் கோலோச்சும் நிலையில் எந்த பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்குள் நுழைந்து வெற்றிபெற்றவர் ரவி தேஜா.

அவரின் பல ஹிட் படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளன. ஆனால் சமீபகாலமாக அவரின் கேரியரில் ஒரு தேக்க நிலை எழுந்துள்ளது. இந்நிலையில் அவருக்கு இப்போது தனிப்பட்ட துயரமாக அவரது தந்தை ராஜகோபால் ராஜு காலமாகியுள்ளார்.

வயது மூப்புக் காரணமாக உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த அவர் தன்னுடைய 90 ஆவது வயதில் நேற்றிரவுக் காலமாகியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர்தான் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான கோட்டா சீனிவாசராவ் காலாமானார். இந்நிலையில் அடுத்தடுத்து தெலுங்கு சினிமாவில் இரு முக்கிய பிரபலங்கள் உயிரிழந்தது சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்