ஒத்த செருப்பு தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் நடிகர்!

Webdunia
வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (22:01 IST)
பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்து இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த படத்தை ஹிந்தியில் தயாரிக்கும் முயற்சியில் பார்த்திபன் ஈடுபட்டு வருகிறார் 
 
ஹிந்தியில் பார்த்திபன் நடித்த வேடத்தில் அபிஷேக் பச்சன் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது ஒத்த செருப்பு திரைப்படம் தெலுங்கில் தயாராகி வருகிறது இந்த படத்தில் பார்த்திபன் நடித்த வேடத்தில் பிரபல தெலுங்கு நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் பாண்டியா கணேஷ் என்பவர் நடிக்க உள்ளார் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த படத்தை தெலுங்கில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெங்கட் சந்திரா என்பவர் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் பணிபுரியும் டெக்னீஷியன்கள் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
ஒத்த செருப்பு படம் தமிழ் தெலுங்கில் உருவாகி வருவது அந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்