தெலுங்கு படத்தை தமிழில் தயாரிக்கும் சிவகார்த்திகேயன்!

செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (15:25 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் தெலுங்கில் நடிக்கும் படத்தை தமிழில் அவரே தயாரிக்க உள்ளாராம்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள டாக்டர் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்றும் அவர் தற்போது அயலான் மற்றும் டாம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்த படத்தை இயக்கயிருப்பது பிரபல தெலுங்கு இயக்குனர் என்ற தகவல் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் வெளியான தெலுங்கு திரைப்படம் ’ஜாதி ரட்னலு’. இந்த திரைப்படத்தை இயக்கிய அனுதீப்  என்பவர்தான் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்துக்கு சம்பளம் என்று வாங்காமல் தமிழ் உரிமையை வாங்கிக் கொண்டுள்ள சிவகார்த்திகேயன் தமிழில் தனது எஸ்கே புரொடக்‌ஷன் மூலமாக தயாரிக்க உள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்