பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு கதாநாயகியாகும் அனிகா சுரேந்திரன்!

Webdunia
வெள்ளி, 14 ஜூலை 2023 (16:15 IST)
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்த்திரமாக ஐந்து சுந்தரிகள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பேபி அனிகா. அதன் பின்னர்  அஜித் நடித்த 'என்னை அறிந்தால்" படத்தில் அவருக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா.

மீண்டும் விஸ்வாசம் படத்திலும் அஜித்துக்கு மகளாக நடித்து பாராட்டுகளைக் குவித்தார். மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் தான் அனிகாவுக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தனர்.

இதையடுத்து வளர்ந்து இளம்பெண்ணாகியுள்ள அனிகா கதாநாயகியாக நடிக்கத் தொடங்கியுள்ளார். ஏற்கனவே மலையாளத்தில் அவர் கதாநாயகியாக ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இப்போது பிக்பாஸ் வின்னரான முகின் நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை ஏற்கனவே முகின் நடித்த வேலன் திரைப்படத்தை இயக்கிய கவின் இயக்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்