தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சதா. இவர், ஜெயம் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின்னர், அந்நியன், வர்ணஜாலம், எதிரி, பிரியசகி, அஜித்துடன் இணைந்து திருப்பதி, உன்னாலே உன்னாலே உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.
அதன்பின்னர், அவர் ஓட்டல் நடத்தி வந்த நிலையில், ஓட்டல் பிசினஸில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், அதை மூடச் சொல்வதாக சமீபத்தில் புகார் அளித்திருந்தார்.
இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில் கூறியதாவது: திருமணம் செய்பவர் புரிந்து கொள்ளலாம் இல்லையென்றால் புரியாமல் இருக்கலாம். திருமணம் செய்வதால் சுதந்திரம் இழக்கிறோம். நான் விலங்குகளை நேசிக்கிறேன். திருமணம் செய்துகொண்டால் என் ஆசைகளைத் தொடர முடியாது போகலாம், சில திருமணம் வெற்றியடையாமல் பிரிகின்றனர். அதனால், திருமணம் செய்யும் எண்ணம் எனக்கில்லை என்று தெரிவித்துள்ளார்.