ஷூட்டிங்கில் ட்ரஸ் மாத்துறதை எட்டி எட்டி பார்ப்பாங்க... நடிகை சுலோக்சனா வேதனை!

செவ்வாய், 11 ஜூலை 2023 (21:05 IST)
தமிழ் சினிமாவின் பழப்பெறும் நடிகையும் எம்எஸ் விஷ்வ நாதனின் மருமகளுமான நடிகை சுலோக்சனா தமிழில் தூறல் நின்னு போச்சு படத்தில் நடித்து அறிமுகமாகி ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழை தவிர்த்து மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடித்துள்ளார்.
 
2 வயதாக இருக்கும்போதே குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடிக்க துவங்கிய இவர் தொடர்ந்து சில படங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அப்போதைய ஷூட்டிங்கை நுபவம் குறித்து பேசிய அவர், 
 
நாங்கள் படப்பிடிப்பு தலத்தில் சேலையை நான்கு பக்கங்களிலும் கட்டி அங்கு தான் உடை மாற்றுவோம். சில சமயங்களில் பயணத்தில் இருக்கும் போது வண்டியை நிறுத்திவிட்டு காருக்கு பின்னாடியே உடை மாற்றவோம். அப்போது சிலர் உடை மாற்றுவதை எட்டி எட்டி பார்ப்பாங்க அது ரொம்ப கூச்சமாக இருக்கும் என்று சுலக்சனா கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்