அண்ணன் பந்தில் அவுட்டானது “ரொம்ப வலிக்குது” – ஹர்திக் பாண்ட்யா பதில்!

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (13:31 IST)
கடந்த மூன்று தினங்களாக ஐபிஎல் போட்டித் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் குஜராத் மற்றும் லக்னோ அணிகள் மோதின. இந்த போட்டியில் குஜராத் அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவின் விக்கெட்டை அவரின் சகோதரர் க்ருனாள் பாண்ட்யா கைப்பற்றினார். தம்பியின் விக்கெட்டை எடுத்ததும் வாயில் கைவைத்து நக்கலாக சிரித்தபடி க்ருனாள் பாண்டியா அந்த விக்கெட்டை கொண்டாடினார். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து போட்டி முடிந்தது பேசிய ஹர்திக் பாண்ட்யா ‘க்ருனாள் பந்தில் அவுட் ஆனது ரொம்பவும் வலிக்குது. ஆனால் ஒரு குடும்பமா மகிழ்ச்சி.’ என கலகலப்பாக பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்