இந்த தொடரை முடித்துவிட்டு அவர் இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணிக்காக கலந்துகொள்ள இருந்தார். இப்போது அந்த தொடரிலும் அவர் பங்கேற்க வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில் நடந்த ஏலத்தில் மிட்செல் மார்ஷை டெல்லி கேப்பிடல்ஸ் அணி 6.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.