ஐபிஎல் 2022-; குஜராத் டைட்டன்ஸ் அணி பவுலிங் தேர்வு
திங்கள், 28 மார்ச் 2022 (19:27 IST)
15 வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி சூப்பர் ஜெயிண்ட் லக்னோ அணிக்கு எதிராகக விளையாடுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் திருவிழா இந்தியாவில் கோலாகலமாகத் தொடங்கும். இந்த ஆண்டு கொரொனா பரவல் காரணமாக 25 % பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றாலும் உலகம் முழுக்க இணையதளம், தொலைக்காட்சி, செல்போன் வழி இத்தொடரை பார்த்து வருகின்றனர்.
இன்றைய போட்டியியோல் ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி முதலில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளார். எனவே கே.எல்.ராகுல் தலைமையிலானலக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணி பேட்டிங் செய்யவுள்ளது.