ஒலிம்பிக் போட்டிகளுக்காக திரும்பப் பெறப்படும் அவசரநிலை

Webdunia
வெள்ளி, 18 ஜூன் 2021 (10:23 IST)
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு ஐந்து வாரங்களுக்கு முன்னதாக அவசர நிலை அறிவிப்பு திருப்பப் பெறப்படும்.

 
ஏப்ரல் மாதம் கொரோனா பரவல் மீண்டு அதிகரிக்க தொடங்கியதால் ஜப்பானின் தலைநகரான டோக்கியோ மற்றும் பிற பகுதிகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த அவசரநிலை வரும் ஞாயிறன்று திரும்பப் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இருப்பினும் ஜூலை 11ஆம் தேதிவரை சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் நிலவும். பெரிய நிகழ்ச்சிகளில் பார்வையாளர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே அனுமதிக்கப்படுவர். ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை மாதம் 23ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 24 தேதி தொடங்குகிறது. ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா பரவலை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
 
இதன் விளைவாக ஜப்பான் பிரதமர், மக்களை தொலைக்காட்சியில் போட்டிகளை கண்டு களிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் சர்வதேச பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை. உள்ளூர் மக்கள் அனுமதிக்கப்படுவது குறித்தும் இன்னும் முடிவாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்