The Greatest of all time! T20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த ஒரே இந்திய வீரர்! மாஸ் காட்டிய King Kohli!

Prasanth Karthick

திங்கள், 7 ஏப்ரல் 2025 (20:48 IST)

இன்றைய ஐபிஎல் போட்டியில் அதிரடியாக விளையாடிய விராட் கோலி, டி20 ரெக்கார்டில் புதிய சாதனையை படைத்துள்ளார்.

 

இன்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடி வரும் நிலையில் ஆர்சிபி பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியில் விராட் கோலி இறங்கி அதிரடியாக விளையாடி வந்த நிலையில் 42 பந்துகளில் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என விளாசி 67 ரன்களை குவித்தார். அப்போது ஒரு சிக்ஸர் முயற்சியில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

 

ஆனால் இன்றைய போட்டியில் அடித்த ரன்கள் மூலம் மொத்தமாக டி20 போட்டிகளில் 13,000 ரன்களை தாண்டிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி. இதற்கு முன்னர் டி20 போட்டிகளில் 13,000 ரன்களை கடந்த வீரர்களில் க்ரிஸ் கெயில் உள்ளிட்ட பிற நாட்டு வீரர்களுடன் முதல் இந்திய வீரராக சாதனை பட்டியலில் இணைந்துள்ளார் கோலி.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்