MI vs RCB! ஆத்தி.. என்னா அடி! Power Play-ல் பொளந்து கட்டிய கோலி-படிக்கல்!

Prasanth Karthick

திங்கள், 7 ஏப்ரல் 2025 (20:05 IST)

இன்று ராயல் சேலஞ்சர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் இடையே போட்டி நடந்து வரும் நிலையில் பவர்ப்ளேவில் விராட் கோலி அதிரடி காட்டியுள்ளார்.

 

டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் ஆர்சிபி பேட்டிங் இறங்கியது. பில் சால்ட் ஓபனிங் இறங்கிய நிலையில் ஒரு பவுண்டரி அடித்து தொடங்கியவர் அடுத்த பாலே அவுட்டானார். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள் உள்ளே நுழைந்த விராட் கோலி அடித்து பந்தாட தொடங்கினார். 

 

பவர்ப்ளே முடிவதற்கு 5 பவுண்டரிகள், 1 சிக்ஸர் என கோலி அடித்து துவைக்க, உடனே பார்ட்னர்ஷிப்பில் இறங்கிய படிக்கலும் 2 பவுண்டரிகள் மூன்று சிக்ஸர் என பொளந்து கட்ட பவர் ப்ளே முடிவில் ரன்கள் 73 ஐ தொட்டது. இதே லெவலில் ஆர்சிபியின் அதிரடி ஆட்டம் தொடர்ந்தால் ஒரு இமாலய இலக்கை மும்பைக்கு ஆர்சிபி நிர்ணயிக்க வாய்ப்புள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்