ஃபீனிக்ஸ் பறவை போல் மீண்டு வருமா சிஎஸ்கே? இன்று பஞ்சாப் உடன் மோதல்..!

Siva

செவ்வாய், 8 ஏப்ரல் 2025 (08:09 IST)
இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்றில் தோல்வி அடைந்து, புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கும் முந்தைய இடத்தில் இருக்கும் சிஎஸ்கே, இன்று பஞ்சாப் அணியுடன் மோதவுள்ளது. இந்த நிலையில், பீனிக்ஸ் பறவை போல் அணி மீண்டு வரவேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அந்த எதிர்பார்ப்பை சிஎஸ்கே இன்று பூர்த்தி செய்யுமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சமீபத்தில் ஐபிஎல் தொடங்கியபோது, சிஎஸ்கே அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றதும், அடுத்தடுத்த போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத அணிகளான டெல்லி, பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் தொடர்ந்து வெற்றி பெற்று முன்னணியில் உள்ள நிலையில், சிஎஸ்கே மட்டும் தொடர்ச்சியாக தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இதனால் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற முடியாத நிலை உருவாகும் அபாயம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இதுவரை தோனியை தூக்கி வைத்து கொண்டாடிய ரசிகர்களே இப்போது அவர் ஓய்வு பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இன்றைய போட்டியில் அணியில் மாற்றம் இருக்குமா? பீனிக்ஸ் பறவை போல் அணி மீண்டும் வெற்றிக்குத் திரும்புமா? சிஎஸ்கே ரசிகர்களுக்கு கோப்பையை வெல்லும் நம்பிக்கையை தருமா? இவை அனைத்தும் கேப்டன் ருத்ராஜ் மற்றும் அணி நிர்வாகத்தின் கையில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்