MI vs RCB Magical Moments: நேற்றைய MI vs RCB போட்டிதான் இந்த சீசன் தொடங்கியதிலிருந்து மிக பரபரப்பாக நடந்த மேட்ச்சாகா மாறியுள்ளது.
நேற்றைய போட்டியில் பும்ரா உள்ளிட்ட பலமான பந்துவீச்சாளர்கள் இருக்கும் தைரியத்தில் முதலில் பந்துவீசி ரன்னை கட்டுப்படுத்திவிட்டு, பின்னர் சேஸ் செய்யலாம் என நினைத்த மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா டாஸ் வென்றபோது பந்துவீச்சை தேர்வு செய்தார்.
Mumbai Indians vs Royal Challengers Bangalore: Magic Moments!
ஆனால் பவர்ப்ளேவில் விராட் கோலி காட்டிய அதிரடி அடுத்தடுத்து ஆர்சிபி வீரர்களுக்கும் ஒரு கான்ஃபிடன்ஸை கொடுக்க சிறப்பாக அடித்து ஆடினார்கள். சன்ரைசர்ஸ் போல கடப்பாரை லைன் அப் என்று கண்ணில் பட்ட பந்தையெல்லாம் அடிக்காமல், சரியான பந்துகளை எதிர்கொண்டு லாவகமாக விளையாடி, ஒரு டீசண்ட்டான பேட்டிங்கை காட்டினார் விராட் கோலி. ராயல் சேலஞ்சர்ஸ் அணி 221 ரன்களை குவித்திருந்தபோது, மும்பை இப்போதுள்ள நிலைக்கு இந்த டார்கெட்டே ஈஸி கிடையாது என்றே பலரும் நினைத்தார்கள்.
அதற்கேற்றவாறே ஓப்பனிங்கில் இறங்கிய (இம்பேக்ட் ப்ளேயர்) ரோகித் சர்மா, ரியான் ரிக்கல்டன் ஒரே போல 17 ரன்களில் அவுட்டாகினர். அடுத்து வந்த வில்ஜாக்ஸ், 360 ப்ளேயர் சூர்யக்குமார் யாதவ்வும் பெரிதாக ரன்கள் சேர்க்காமலே வெளியேறினர்.
12வது ஓவரில் சூர்யகுமார் வெளியேறியபோது மும்பை 99 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ஆனால் மிடில் ஆர்டரில் ஹர்திக் பாண்ட்யாவும், திலக் வர்மாவும் இறங்கியதும்தான் மிகப்பெரிய திருப்புமுனை. திலக் வர்மா அதிரடி ஆட்டத்தால் 29 பந்துகளில் 56 ரன்களை குவித்தார். பாண்ட்யா 15 பந்துகளிலேயே 3 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் என மைதானத்தை களேபரமாக்கி 42 ரன்களை குவித்தார்.
அதுவரை ஆர்சிபி பக்கம் நின்ற ஆட்டம் அப்படியே மும்பை பக்கம் மாறியது கேப்டன் ஹர்திக்கால். ஆனால் 17 வது ஓவரில் திலக் வர்மாவை புவனேஷ்குமார் தட்டித் தூக்க, ஹர்திக் பாண்ட்யாவை ஹெசில்வுட் முடித்துவிட்டார். அதற்கடுத்து வந்த சாண்ட்னர், சஹர் பவுண்டரிகள், சிக்ஸர் அடித்தாலும் க்ருனால் பாண்ட்யாவால் ஒரே விக்கெட்டில் மும்பை 3 விக்கெட்டுகளை இழந்தது. கடைசியாக வெறும் 12 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வென்றது.
கடைசி பந்து வரை ஆர்சிபியும் விட்டுக் கொடுக்கவில்லை, மும்பை இந்தியன்ஸும் விட்டுக் கொடுக்கவில்லை. இருவருக்கும் இடையே வெற்றி வாய்ப்பு மாறி மாறி வந்துக் கொண்டிருக்க ஊசிக்கு ஊசி எதிர்முனை பாயுமா என்பது போல் மோதிக் கொண்டிருக்க கடைசி ஓவர்களுக்கெல்லாம் பிபி மாத்திரை போடாத குறையாக மேட்ச் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள், இந்த சீசனின் சிறப்பான மேட்ச் இதுதான் என்கிறார்கள். இதே விடாமுயற்சியுடன் ஆர்சிபி தொடர்ந்தால் இந்த சீசனில் ஈ சாலா கப் நமதே என்று பூரிக்கிறது ஆர்சிபி ரசிகர் படை.