ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக கல்லூரி மாணவி!

வியாழன், 8 ஏப்ரல் 2021 (21:14 IST)
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக கல்லூரி மாணவி!
வரும் ஜூலை மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பங்கேற்க இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பாய்மர படகுப் போட்டிக்கு 4 தமிழக வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த நேத்ரா குமணன், விஷ்ணு, சரவணன் மற்றும் கணபதி ஆகியோர் இந்த ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற்றுள்ளனர் என்பதும் இவர்களில் நேத்திரா குமணன் கல்லூரி மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் மகளிர் ஒற்றையர் பிரிவில் களமிறங்க உள்ளார் 
 
ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவிலிருந்து தகுதிபெறும் முதல் வீராங்கனை என்ற சாதனையை இவர் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் போட்டிக்கான வாய்ப்பு உறுதி செய்ததை அடுத்து நேத்ரா குமணனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்