இலங்கையை அசால்ட்டாக வெற்றிகொண்ட பங்களாதேஷ்!

Webdunia
திங்கள், 24 மே 2021 (11:41 IST)
இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் வங்கதேசம் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் இப்போது விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. அந்த அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 257 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் ரஹீம் அதிகபட்சமாக 84 ரன்கள் சேர்த்தார். அதன் பின்னர் இலங்கை அணியின் மோசமான பேட்டிங்கால் 224 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்து 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. வங்கதேச வீரர் மெகிடி ஹசன் அபாரமாக பந்து வீசி 30 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்